ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கபதக்கம்!! 4ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!!

0
134
#image_title

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்!! 4ம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!!

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது.சில தினங்களுக்கு முன்பு தங்க பதக்கப்பட்டியலில் 6ம் இடத்திலிருந்த  இந்தியா மேலும் ஒரு தங்கபதக்கத்தை பெற்று 4ம்  இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்தியா பெற்ற தங்கபதக்க பட்டியல் பின்வருமாறு

தடகளப்போட்டி:

ஆண்கள் 1500 மீட்டர் ஹூட் முதல் சுற்றில் அஜய் குமார் சரோஜ் 2ம் இடம் பிடித்துள்ளார் மேலும் ஜான்சன் ஜின்சன் 5ம் இடத்தை பெற்றார்.இதனைத்தொடர்ந்து அஜ்ய் குமார் மற்றும் ஜான்சன் ஜின்சன் ஆகிய இருவரும் இறுதிச்சுற்றிற்கு முன்னேறினர்.

ரோலர் ஸ்கேட்டிங்:

பெண்கள் 10,000 மீட்டர் ரோலர் ஸ்கேடிங்கில் ஆரதி கஸ்தூரி ராஜ் 5ம் இடத்தையும் ,ஹிரல் ஷது 7ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

பெண்கள் தடகளம்:

பெண்கள் தடைகள் போட்டியான 100 மீட்டர் ஹர்டிங்ஸ் சுற்றில் 5ம் இடம் பிடித்த நித்யா ராம்ராஜ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

துப்பாக்கி சுடுதல்:

10 மீட்டர் ஏர் ரைபிள் இணை சுற்றில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.இந்தியாவின் சர்ஜோத் சிங்,திவ்யா இணை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தடகளம்:

ஆண்கள் தடகளப் போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் 7.97  புள்ளிகள் முதல் முயற்சியிலேயே எடுத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.இச்சுற்றில் 7.90 புள்ளி எடுத்தாலே இறுதி சுற்றுக்கு தகுதியாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குராஷ்:

குராஷ் 52  கிலோ  ரவுண்டு ஆப்    32 பவுண்டு 10 போட்டியில் துர்கமெஸ்தான் வீராங்கனையை 5-0  என்ற புள்ளியில் வீழ்த்தி இந்திய வீராங்கனை பிங்கி பல்ஹரா வெற்றி பெற்றார்.

பெண்கள் 52  ரவுண்டு ஆப் 16 பவுண்டு 5 போட்டியில் தென்கொரியா வீராங்கனையை  இந்திய வீராங்கனை பிங்கி பல்ஹார 5-0 என்ற புள்ளியில் வெற்றி கொண்டார்.

தடகளம்:

பெண்கள் 100 மீட்டர் ஹர்டிங்க்ஸ்-ஹூட் சூட்டில் இந்திய வீராங்கனையான ஜோதி யாரஜி 2ம்  இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா  பதக்க பட்டியலில் 4ம் இடம்:

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 8தங்கம்,12 வெள்ளி,13 வெண்கலம் மொத்தம் 33 பதக்கங்களை பெற்று இந்தியா 4ம் இடத்தில் உள்ளது.

Previous article2025ல் மிரட்ட வருகிறார் ராக்கிபாய்!!! கேஜிஎப் 3 படத்தின் அப்டேட்!!!
Next articleதமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு எங்கெல்லாம் மழைபொழிவுக்கு வாய்ப்புள்ளது!!