சேலத்தில் நடந்த மற்றுமொரு ஜெய்பீம்! முதல்வரின் அதிரடி உத்தரவு!

0
177
Another Jaybeam to host in Salem! Chief's Action Order!
Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலத்தில் நடந்த மற்றுமொரு ஜெய்பீம்! முதல்வரின் அதிரடி உத்தரவு!

போலீஸ் அதிகாரிகள் பலர் தங்களின் பதவியை பயன்படுத்தி பல அராஜகங்களை செய்து வருகின்றனர்.அவற்றை தடுக்க பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டும் ஏதும் நடைமுறைபடுத்தவில்லை,ஏதேனும் நடைமுறையில் இருந்தால் போலீசார் தங்கள் பதவியை வைத்து செய்யும் தவறுகள் சற்றாவது குறைந்து காணப்படும்.அந்த வரிசையில் சாத்தான்குளம் சம்பவம் தமிழகத்தை உலுக்கும் அளவிற்கு இருந்தது.இன்றுவரை அந்த சம்பவம் மக்கள் மனதில்  நீங்கா நினைவாகவே உள்ளது.இவ்வாறு இருக்கையில் போலீசார் மேல் தொடர் குற்றச்சாடட்டுக்கள் நடந்த வண்ணமாகவே உள்ளது.

அந்தவகையில் சட்டக்கல்லூரி பயிலும் மாணவன் தன் குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரம் பணி புரிந்து வருகிறார்.அவ்வாறு தனது வேலையை முடித்தவிட்டு வீடு திரும்பும் போது அங்கு கண்காணிப்பில் இருந்த போலீசார் அந்த கல்லூரி மாணவரிடம் சரியான முறையில் மாஸ்க் அணியவில்லை என்று அபராதம் கட்டும்படி கூறியுள்ளனர்.மாஸ்க் தானே நான் சரியாக அணியவில்லை நான் எதற்கு அபராதம் கட்ட வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளனர்.இருவருக்கிடையே வாக்குவாதம் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக போலீசார் ,அந்த மாணவன் தங்களை தாக்க முயன்றதாக பொய் வழக்கு போட்டு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.இரவு முழுவதும் அந்த மாணவனை  உணவு ஏதும் தராமல் நிர்வாணமாக அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

அந்த மாணவன் தனக்கு நேர்ந்த துயரத்தை கூறி காவல் நிலையத்தில் அந்த காவல் அதிகாரிகள் மீது புகார் அளித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.அதேபோல சில தினங்களுக்கு முன்பு சேலத்தில்  சேந்தமங்கலத்தில் உள்ள மளிகை கடை ஒன்றில் நகை, பணம் போன்றவை திருடு போனது.பின்பு போலீசார் அந்த கொள்ளை தொடர்பாக  விசாரணை செய்து பிரபு என்பவரை கைது செய்தனர்.மேலும் இந்த திருட்டுக்கு உடைந்தையாக இருந்த மாற்றுத்திறனாளியான  பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஹம்சா ஆகியோரை கைது செய்தனர்.கைது செய்து நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்தனர்.திடீரென்று மாற்றுத்திரனாளி பிரபாகரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது என்று நாமக்கல் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் தீவீர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இன்று காலை சிகிச்சை பலனின்றி மாற்றுத்திறனாளியான பிரபாகரன் உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக டிஐஜி ,சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இருவர் மற்றும் தலைமை காவல் அதிகாரி ஒருவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளார்.இந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த வழக்கை குற்ற புலனாய்வுத்துறை விசாரணை செய்யும் படி உத்தரவிட்டுள்ளார்.மேலும் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் தருவதாக கூறியுள்ளார்.இறந்த போன மாற்றுத்திறனாளி உடல்நலக்குறைவால் இறந்திற்க வாய்ப்பில்லை என பலர் கூறுகின்றனர்.அதனால் தான் இந்த வழக்கு CBCID கைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Previous articleசேலத்தை அச்சுறுத்தும் கொரோனா! இந்த மாவட்டத்தில் ஊரடங்கு?
Next articleதமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம்