மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. மீண்டும் 1 நாள் அரசு விடுமுறை!!

0
168
another-public-holiday-followed-by-diwali-government-announcement
another-public-holiday-followed-by-diwali-government-announcement

தீபாவளி முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு சத் பூஜை கொண்டாடப்படுகிறது. பீஹார், ஜார்க்கண்ட் மற்றும் உத்திரபிரதேசத்தில் இந்த சத் பூஜை மிக விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், துணைநிலை ஆளுநர் சக்சேனா அவர்கள் சத் பூஜை கொண்டாடப்படும் நவம்பர் 7 ஆம் தேதி அன்று டெல்லிக்கு பொது விடுமுறை வழங்குமாறு கடிதம் ஒன்றினை முதல்வருக்கு எழுதியிருந்தார்.

இக்கடிதத்தினை தொடர்ந்து முதல்வர் அவர்கள் நவம்பர் 7 ஆம் தேதி அன்று டெல்லிக்கு பொது விடுமுறை வழங்கப்படும் என்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். இதனை அவர் தனது X தலத்தில் வெளியிட்டிருந்ததாவது, ” சத் திருவிழாவிற்கு நவம்பர் 7 அன்று விடுமுறை அறிவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது “.

இதனால் பூர்வாஞ்சல் நமது சகோதர சகோதரிகள் அனைவரும் விழாவை ஆடம்பரமாக கொண்டாடலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த அறிக்கை தொடர்பான தனது கையெழுத்திட்ட உத்தரவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சத் பூஜை :-

உயிர்கள் வாழக் காரணமாக விளங்கும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்குமுகமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.

தாங்கள் நேர்ந்துகொண்ட விருப்பங்களை நிறைவேற்றியமைக்காகவும் நன்றி தெரிவிக்க இவ்விழா கடைபிடிக்கப்படுகிறது. கடுமையான வழிபாடு விதிகளைக் கொண்ட இவ்விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நீர்நிலைகளில் (கங்கை எனக் கருதி) குளித்து நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருத்தல்,நீரில் நெடுநேரம் நிற்றல் மற்றும் கதிர் எழும்,விழும் காலங்களில் அருக்கியம் (படையல்)விடுதல் என்ற கூறுகளை உள்ளடக்கியது தான் இந்த சத் பூஜை.

Previous articleஅரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.18,000 திலிருந்து ரூ.34,000 ஆக சம்பள உயர்வு!!
Next articleஏடிஎம் மிஷினில் உங்களது பணம் மாட்டிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் செய்யுங்கள்!!