தமிழக அரசுக்கு வந்த சோதனை! இந்த ஆட்சி விரைந்து செயல்படுமா?
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.ஓர் வருடத்திற்கு முன்,தடுப்பூசி அமலுக்கு வரும் முன்னே தமிழகம் அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மக்கள் பாதுகாப்பாக இருந்தனர்.ஆனால் தற்போதைய ஆட்சி காலத்தில் முன் நடவடிக்கை ஏதும் எடுக்கா காரணத்தினால் பல ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.ஆயிரம் கணக்கான உயிர்களை இழந்த பிறகே மக்களுக்கு அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறினர்.
அதே நேரத்தில் மக்களும் தங்களின் உயிர்களை காப்பற்றிக்கொள்ள அனைவரும் தடுப்பூசியை ஓர் கவசம் போல் நினைத்து செலுத்திக்கொண்டனர்.அவ்வாறு செலுத்தியத்தில் ஆரம்ப காலத்திலேயே 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.அதனையடுத்து தடுப்பூசி திருவிழா என ஆரம்பித்து 45 வயது உடையவர்களுக்கு போடப்பட்டது.அதனைத்தொடர்ந்து தமிழக அரசு,18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்து தடுப்பூசி போடும் முறையை கொண்டு வந்தனர்.ஆனால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் கணக்கானோர் பதிவு செய்ய முற்பட்டதால் அந்த இணையம் செயலிழந்து போனது.
அதனையடுத்து தடுப்பூசி தட்டுப்பாட்டால் 18 வயது-க்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை நிறுத்தி வைத்தனர்.மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து தடுப்பூசி வரவழைக்கப்பட்டு செலுத்தப்பட்டும் வந்தது.இந்நிலையில் தற்போது மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இன்று சென்னை ஐக்கோர்ட் வழக்கறிஞர்கள் மற்றும் பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது.இந்த முகாமில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.அதில் கலந்துக்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிகப்படியானோர் தடுப்பூசி செலுத்தியதில் சேப்பாக்கம் முதலிடத்தில் உள்ளது.
தற்போது மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட முன் வரும் நேரத்தில் இவ்வாறான பற்றாக்குறை மக்களுக்கு ஏமாற்றத்தையே தரும்.அதுமட்டுமின்றி தற்போது 2 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதால் இன்று மதியத்திற்குள்ளேயே பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்.தற்போது தடுப்பூசி பற்றாக்குறையால் 19 நகர்ப்புற ஆரம்ப சுகாதர நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது என பேசியுள்ளார்.தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இவ்வாறு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மீண்டும் அதிகப்படியாக பரவுவதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது.இந்த தட்டுப்பாட்டை தமிழக அரசு கூடிய விரைவில் தகற்ற வேண்டும்.