மலையாள திரையுலகில் நடந்த மேலும் ஒரு சோகம்! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம் !!

0
176
#image_title
மலையாள திரையுலகில் நடந்த மேலும் ஒரு சோகம்! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்!!
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் டாக்டர் ப்ரியா அவர்கள் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரபல நடிகர் கிஷோர் சத்யா அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வந்த நடிகை ப்ரியா அவர்கள் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பி.ஆர்.எஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நடிகை மருத்துவர் ப்ரியா அவர்கள் நேற்று(அக்டோபர்31) மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக உயிரழந்துள்ளார்.  மேலும் 8 மாதக் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நடிகர் கிஷோர் சத்யா அவர்கள் சமூக வலைதள பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரபல சீரியல் நடிகர் கிஷோர் சத்யா அவர்கள் சமூக வலைதளப்பக்கத்தில் “மலையாளத் திரையுலகில் மேலும் ஒரு எதிர்பாராத துயர சம்பவம் நடந்துள்ளது. டாக்டர் ப்ரியா அவர்கள் மாரடைப்பால் காலமானார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். வழக்கமான பரிசோதனைக்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.  அவருடைய 8 மாதக் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. அவருக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. ப்ரியா அவர்களின் கணவர் மற்றும் ப்ரியா அவர்களின் தாய் இருவருக்கும் எவ்வாறு ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை” என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையாள சீரியல் நடிகை ரெஞ்சுஷா விஜயன் அவர்கள் இறந்த துயரம் கூட இன்னும் மறைய வில்லை.  அதற்குள் மற்றொரு நடிகை ப்ரியா அவர்கள் மாரடைப்பால்  உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகம் சோகத்தில் மூழ்கி இருக்கின்றது.
Previous articleவந்தது ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பயணிகளிடம் இதை கேட்கவே கூடாது!! அரசு நடத்துநர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு!!  
Next articleஉலகின் சிறந்த 50 இனிப்புகளில் இடம் பிடித்த இந்தியாவின் ரசமலாய்! லிஸ்ட்ல இன்னொரு ஸ்வீட்டும் இருக்கு !!