உலகின் சிறந்த 50 இனிப்புகளில் இடம் பிடித்த இந்தியாவின் ரசமலாய்! லிஸ்ட்ல இன்னொரு ஸ்வீட்டும் இருக்கு !!

0
35
#image_title
உலகின் சிறந்த 50 இனிப்புகளில் இடம் பிடித்த இந்தியாவின் ரசமலாய்! லிஸ்ட்ல இன்னொரு ஸ்வீட்டும் இருக்கு
உலகில் டாப் 50 இனிப்பு வகைகள் பற்றிய பட்டியல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இரண்டு இனிப்பு வகைகள் இடம் பெற்று உள்ளது.
உலக அளவில் உள்ள இனிப்பு பண்டங்களின் அனுபவத்தை கண்டறியும் விதத்தில் டேஸ்ட்அட்லாஸ்ட் என்கிற அமைப்பு ஆய்வு ஒன்றை மேட்கொண்டது. அந்த ஆய்வில் உலக அளவில் உள்ள சிறந்த டாப் 50 இனிப்புகள் அடங்கிய பட்டியலை டேஸ்ட்அட்லாஸ்ட் அமைப்பு வெளியிட்டது.
டேஸ்ட்அட்லாஸ்ட் அமைப்பு வெளியிட்ட உலகளாவிய சிறந்த 50 இனிப்புகள் கொண்ட பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இனிப்பு வகைகளான ரசமலாய் மற்றும் காஜூ கத்திலி ஆகிய இனிப்பு வகைகள் இடம் பெற்றுள்ளது. இதில் ரசமலாய் இனிப்பு வகைக்கு 31வது இடமும் அதிலிருந்து 10 இடங்கள் தள்ளி காஜூ கத்திலி 41வது இடத்திலும் இருக்கின்றது.
இந்தியா நாட்டில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் இனிப்புகளில் ஒன்றாக இருக்கும் ரசமலாய் இனிப்பு பண்டமானது வைட் கிரீம், ஏலக்காய், சீஸ், சர்க்கரை, பால் முதலான பொருட்களை கொண்டு தயார் செய்யப்படுகின்றது. இத்துடன் பாதாம், முந்திரி, குங்குமப்பூ ஆகியவற்றையும் சேர்த்து  சுவையுடன் இந்த இனிப்பு தயார் செய்யப்படுகின்றது.
மேற்கு வங்க மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு தயார் செய்யப்படும் இந்த ரக மலாய் ஹோலிப் பண்டிகையின் பொழுது முக்கியமான இனிப்பாக கருதப்படுகின்றது. மேலும் தீபாவளிப் பண்டிகையின் பொழுது இந்த இனிப்பு வகை மக்கள் பலராலும் விரும்பப்படும் உணவாக இருக்கின்றது.
இதே போல காஜூ கத்திலி இனிப்பு வகை பண்டிகை காலங்களில் மட்டுமில்லாமல் சாதாரண நாட்களிலும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவாக மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இந்த காஜூ கத்திலி இனிப்பு வகை காஜூ பர்பி என்றும் அழைக்கப்படுகின்றது.
காஜூ கத்திலி இனிப்பு வகை முந்திரி, நெய், வெண்ணெய், சர்க்கரை, ஏலக்காய் தூள் ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்யப்படுகின்றது. வைரத்தின் வடிவத்தில் இருக்கும் இந்த காஜூ கத்திலி இந்தியாவின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றாக இருக்கின்றது.
இந்த உலக அளவிலான சிறந்த 50 இனிப்பு உணவு வகைகளில் க்ரீப்ஸ் இனிப்பு வகை முதலிடத்திலும், பாம்போகாடோ இனிப்பு வகை இரண்டாவது இடத்தையும், கியூசோ ஹெலடோ மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.