பிரம்மாண்டமாக தயாராக உள்ள அந்தாதுன் தமிழ் ரீமேக்! லேட்டஸ்ட்  அப்டேட்!

Photo of author

By Parthipan K

பிரம்மாண்டமாக தயாராக உள்ள அந்தாதுன் தமிழ் ரீமேக்! லேட்டஸ்ட்  அப்டேட்!

Parthipan K

சமீபத்தில் வெளியாகி, பிளாக்பஸ்டர் கண்ட பாலிவுட் படம் தான் ‘அந்தாதுன்’.

வெவ்வேறு மொழிகளுக்கு ஏற்றவாறு கலகலப்புடன் கூடிய திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கி இருப்பார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் 450 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்து ஹிட்டடித்த இந்தப்படம்  சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என பல தேசிய விருதுகளை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் தியாகராஜன் கைப்பற்றியுள்ளார்.

பிரமாண்டமாக தயாராக உள்ள இந்த படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாம். மேலும் இந்த படத்தை ஜேஜே பேட்ரிக் இயக்க, ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரஷாந்த் நடிக்கவுள்ளாராம்.

மேலும் தப்பு கதாபாத்திரத்திற்கு மிகப் பிரபலமான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளதாகவும், இதற்கான இடங்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் ஒப்பந்தம் என அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.