முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்த லஞ்ச ஒழிப்புத் துறை! அதிரடி சோதனை!

Photo of author

By Sakthi

சென்னையிலிருந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் எஸ் பி வேலுமணி தனக்கு வைத்திருக்கின்ற வங்கியில் அவருடைய லாக்கரை திறந்து சோதனை செய்து இருக்கிறார்கள் அதை ஒரு வங்கி அதிகாரிகளிடமும் கடைசியாக இந்த லாக்கர் எப்போது திறக்கப்பட்டது போன்ற விவரங்களையும் விசாரணை செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் அமைச்சர் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருத்தவரையில் அதிமுக மிகப்பெரிய செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் வேலுமணி தான் என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை திமுக அந்த பகுதியில் தலை தூக்கவே முடியவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எப்படியாவது கோயம்புத்தூரை தன் வசம் கொண்டு வந்துவிடவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டார். ஆனாலும் அவருடைய முயற்சி பலனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது இதில் பல ஆவணங்கள் சிக்கியதாக ஆளுங்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வாங்கி லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை செய்கிறார்கள். அரசு ஒப்பந்த பணிகள் வாங்கித் தருவதாக தெரிவித்து 1.20 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எஸ் பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவரை பின்தொடர்ந்த காவல்துறையினர் அவருக்கு சொந்தமான 50 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை செய்தது இந்த சோதனையில் 13 லட்சம் ரூபாய் முக்கிய ஆவணங்கள் மற்றும் சாதி ஒன்றையும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவருடைய வங்கிக் கணக்குகளும் முழுவதுமாக முடக்கப்பட்டு விட்டது.

இந்த சூழ்நிலையில் ,சென்னையிலிருந்து வந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் எஸ் பி வேலுமணி கணக்கு வைத்திருக்கும் வங்கியில் அவருடைய லாக்கரை திறந்து சோதனை செய்திருக்கிறார்கள். அதோடு வங்கி அதிகாரிகளிடம் கடைசியாக இந்த பெட்டகம் எப்பொழுது திறக்கப்பட்டது போன்ற விவரங்களையும் விசாரித்துக் கேட்டுப் பெற்றனர்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று சென்றதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. அதே சமயம் அவருடைய பெட்டகத்தில் இருந்து ஏதேனும் ஆவணங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறதா என்ற விவரங்களை இதுவரையில் அதிகாரிகள் யாரும் வெளியிடவில்லை.