புளுசட்டை மாறனின் ’ஆன்ட்டி இந்தியன்’: கொதித்து எழுவார்களா பாஜகவினர்?

Photo of author

By CineDesk

புளுசட்டை மாறனின் ’ஆன்ட்டி இந்தியன்’: கொதித்து எழுவார்களா பாஜகவினர்?

ஒட்டுமொத்த கோலிவுட் திரை உலகினர் அனைவருக்கும் பிடிக்காத ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது அனேகமாக புளூசட்டை மாறன் ஆகத்தான் இருக்கும். சிறிய நடிகர்கள் முதல் மாஸ் நடிகர்கள் வரை அனைத்து நடிகர்கள் நடிக்கும் படங்களை எந்தவித வித்தியாசங்கள் எதுவும் இல்லாமல் கழுவி கழுவி ஊற்றி அவர் செய்யும் விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல திரைப்படங்கள் அவரது விமர்சனத்தால் படுதோல்வி அடைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகில் அனைவரையும் கேலிசெய்து விமர்சனம் செய்த புளூசட்டை மாறன், தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை திரையுலகினர் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்தவர்களின் படத்தில் குற்றம் குறை சொன்ன புளூசட்டை மாறன் எப்படி ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது

இந்த நிலையில் புளூசட்டை மாறன் இயக்கிவரும் திரைப்படத்திற்கு ’ஆன்ட்டி இந்தியன்’ என்ற டைட்டில் வைத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சிப்படுத்தியதோ இல்லையோ, பாஜகவினரை கண்டிப்பாக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்றும் இந்த படத்திற்கு பாஜகவினர் தங்களது எதிர்ப்பை காண்பித்து இலவச புரமோஷன் செய்து படத்தை ஹிட் ஆக்கி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.