காஷ்மீரில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பல்

காஷ்மீரில் காவல்துறையினர் மீது சமூக விரோத கும்பல் நடத்திய தாக்குதலில் காவல்துறையை சேர்ந்த 18 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்திலுள்ள படோட் நகரில் ஆக்கிரமிப்பு காரியங்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறை மற்றும் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.  காவல்துறையினர் வருவதை அறிந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள் சிலருடன் இணைந்து கொண்டு கும்பலாக காவல் துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.  காவல் துறையினர் மீது அவர்கள் கற்களையும் வீசி எறிந்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி வனத்துறை அதிகாரி குல்தீப் சிங் கூறும்பொழுது, ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து சில சமூக விரோதிகள் எங்களுடைய குழுவினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது என்று தெரிவித்து உள்ளார்.

Leave a Comment