“மெகா பிளான்” விஜய் போட்ட ரூட்.. அதை அச்சுபிசராமல் முடித்த அன்புமணி!! திமுக-வுக்கு எகிறும் பிரஷர்!!

Photo of author

By Rupa

“மெகா பிளான்” விஜய் போட்ட ரூட்.. அதை அச்சுபிசராமல் முடித்த அன்புமணி!! திமுக-வுக்கு எகிறும் பிரஷர்!!

Rupa

Anumbumani has issued a statement in favor of Vijay's opinion against the construction of Parantur Airport

TVK PMK: தமிழகத்தில் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கான போராட்டமானது இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் இதனால் பெரும் லாபம் கிடைக்கும் ஒரு ரூபாய் போட்டால் கூட 100 ரூபாய் வரும் என்று பணத்தைப் பற்றியே பேசி வருகின்றனர். ஆனால் மக்கள் இதனை ஒருபோதும் ஏற்கவில்லை. இதன் எதிர்ப்பாளர்களையும் விஜய் நேரடியாக சந்தித்து ஆதரவு கொடுத்தார். அவ்வாறு சந்தித்த பொழுது நான் பொருளாதார வளர்ச்சியை ஒருபோதும் தடுக்கவில்லை இங்கு வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.

இதற்கு மாற்றாக மக்களுக்கு பாதிக்காத இடத்தில் விமான நிலையம் அமைக்குமாறு கூறியிருந்தார். இவர் இப்படி பேசிய அடுத்த நாளே திமுக சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் மக்களுக்கு பாதிக்காத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். அதேபோல அன்புமணி ராமதாஸ் அவர்களும் விஜய்யின் ரூட்டை பிடித்துக் கொண்டு இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் தற்பொழுது செயல்பட்டு வரும் விமான நிலையமே குறைந்தபட்சமாக எட்டு வருடங்களில் அதன் கையாலும் திறனை அடைந்து விடும், இதனால் பசுமை விமான நிலையம் அமைக்க கோரி 20 வருடங்களுக்கு மேல் நாங்கள் கூறி வருகிறோம். அதேபோல தற்பொழுது புதிய விமான நிலையம் விளைநிலங்களை தகர்த்தி வைப்பதை விட அரசின் ஐந்தாயிரம் ஏக்கர் நிலமானது திருப்போரூர் பகுதியில் உள்ளது. அந்த பகுதியில் விமான நிலையம் அமைக்கும் பொழுது யாருக்கும் பாதிப்பு இருக்காது என கூறியுள்ளார்.

விஜய்யும் இதே கருத்தைதான் தெரிவித்தார். அன்புமணி மற்றும் விஜய் இருவரும் ஒருமித்தமான கருத்தை தமிழக அரசுக்கு வழங்கி உள்ளனர். இதற்குப்    பின்னால் இருவருக்கும் இடையே மறைமுக பேச்சு வார்த்தை இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இருவரின் எண்ணமானது   வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வகிக்க வழி வகுக்கும் என்பது போல் உள்ளது.