அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

Photo of author

By Janani

அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

Janani

Updated on:

Anupama Parameswaran first song release from Lockdown

அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் லாக் டவுன் படத்தில் அனுபவமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் சி.எம்.எஸ் கோட்டயம் கல்லூரியில் தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த போது தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்துள்ளார்.

அனுபமா 2015ல் முதன்முதலாக அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் வெளியாகிய பிரேமம் என்ற மெகா ஹிட் திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நிவின் பாலியுடன் பள்ளி மாணவி மேரி கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் அவர் மிகவும் பிரபலம் அடைந்தார். அதனை தொடர்ந்து அலைஸ் என்ற மலையாள படத்தில் கேமியா ரோலிலும், அ ஆ என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் என பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. மேலும் 2016ல் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேகிலும் அதை மேரி கதாபாத்திரத்தில் வாய்ப்புகள் வந்தது.

இவை மட்டுமின்றி தமிழிலும் கொடி என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவர் தனது காலடியை பதித்தார். இந்த நிலையில் கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தின் மூலம் மக்களை கவர்ந்தார். அதனை தொடர்ந்து பரதா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

தற்போது லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடித்துள்ளார். இது கொரோனா காலகட்டத்தில் நடக்க கூடிய கதையாக அமைந்துள்ளது. மேலும் இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஏ.ஆர் ஜீவா இயக்குகிறார். இதற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியது. இதற்கு லாக் டவுன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான “லாவா லாவா” என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியது. இப்பாடலை சினேகன் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடியுள்ளார்.