நாம் இரவில் தூங்கும் பொழுது ஏதேனும் ஒரு கனவினை கண்டால் அந்தக் கனவு எதற்காக வந்தது? என்ன நடக்கப் போகிறது? இது நல்லதா இல்லை கெட்டதா? என பலவிதமான கேள்விகள் நமக்குள் வரும். நாம் காண்கின்ற கனவுகளை வைத்து தெய்வங்களின் ஆசிர்வாதம் நமக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்தும் அறியலாம். அதனை எவ்வாறு அறிவது என்பது குறித்து தற்போது காண்போம்.
கனவுகள் என்பது நமது எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவிக்கக்கூடிய ஒரு குறிப்பு என்றே கூறலாம். அவ்வாறு காண்கின்ற கனவானது பல பேருக்கு வெறும் கனவாகவே முடிந்து விடுகிறது. ஆனால் சிலருக்கு அவர்கள் கண்ட கனவு நிஜத்தில் அப்படியே பலிக்கும். அவ்வாறு கண்ட கனவுகள் பலிக்க கூடியவர்கள் தெய்வ சக்தி கொண்டவர்களாக கூறப்படுகின்றனர்.
அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் வருகின்ற கனவுகள் அனைத்தும் பலிக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு காண்கின்ற கனவில் கோவில்கள் அடிக்கடி வந்தால் தெய்வத்தின் அருள் நமக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும் கனவில் வந்த அந்த கோவிலுக்கு சென்று வரவேண்டும்.
கனவில் நீங்கள் கோவிலுக்கு சென்று மக்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாமல் போவதை போல கனவு கண்டால் எதிர்பாராத சில சிக்கல்களில் மாட்டிக் கொள்ளப் போவதாக அர்த்தம்.
உங்கள் கனவில் கோவிலின் கதவுகள் மூடி இருந்தாலோ அல்லது கோவிலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தாலோ கடவுள் உங்களை சோதிக்க போகிறார் என்று அர்த்தம். உங்கள் கனவில் அம்பு, வில், காளை மாடு, மயில், குங்குமம் விபூதி, கற்பூரம், எலி போன்ற கோவில் சம்பந்தமான பொருட்கள் வந்தால் கடவுளின் அருள் உங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் கனவில் கடவுளை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது சாமியிடம் இருந்து பூ கீழே விழுவது, மணி அடிக்கும் ஓசை, யாரோ ஒருவர் ஓடி வந்து உங்களிடம் நல்ல செய்தி கூறுவது போல கண்டால் கடவுளே நேரடியாக வந்து உங்களிடம் சொல்வது போன்று அர்த்தம்.
சிலருக்கு அவர்களது வீட்டிலேயே வாழ்ந்து இறந்தவர்கள் கனவில் வந்தால் அவர்களின் பரிபூரண ஆசீர்வாதம் இருப்பதாக கூறப்படுகிறது.