டிவி சேனலில் இனி இது போன்று ஒளிபரப்பு செய்தால் சேனல் முடக்கப்படும்!! மத்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கை!
டிவி சேனல்கள் அதிக டிஆர்பி-யை ஏற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு விதி மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகளை வெளியிடுவதற்கான சில சட்ட திட்டங்கள் உள்ளன.இது தொடர்பாக அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அதில் கூறியதவாறு:
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யும் போது இறந்த உடல்கள்,ரத்தம் சிதறி கிடப்பது மற்றும் காயம் அடைந்த நபர்களின் புகைப்படம் அல்லது வீடியோக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் முதியோர்களை இரக்கமற்ற முறையில் அடிக்கப்படுவது போன்ற வீடியோக்களை அப்படியே ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும்,டிவி சேனல்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது இது போன்ற கொடூரமான பதிவுகளை காட்சிப்படுத்தும் போது,அந்த காட்சிகளை சிறிது மாற்றி அமைத்தல் அல்லது எடிட்டிங் செய்தல் அல்லது நிழல் குறியீட்டீனை பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளை பயன்படுத்திய பின்பே ஒளிபரப்பு செய்ய வேண்டும்.மேலும் விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் காட்சிப்படுத்தும் பொழுது அதை பார்ப்போருக்கு வருத்தம் அளிக்காத விதமாகவும் இருக்க வேண்டும் என்று அந்த சுற்று அறிக்கையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய அரசு அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் ஓர் எச்சரிக்கை சுற்றறிக்கினையும் அனுப்பி உள்ளது.அதில் குறிப்பிட்டுள்ளவாறு:
சமீப காலமாக டிவி சேனல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களில் தனி உரிமை மீறல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது.அதாவது தீங்கிழைக்கும் விதமாக அவதூறுகளை பரப்பும் வீதமாக ஒளிபரப்பு காட்சிகள் காணப்படுகிறது.குழந்தைகள், முதியவர்கள்,நடுத்தர வயதினர்கள் என அனைவரும் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே தொலைக்காட்சி மாறி உள்ளது.இந்த சூழ்நிலையில் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது பொறுப்புணர்வையும் ஒழுக்கத்தையும் அதிகம் கடைபிடிக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றன.
அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் ஒளிபரப்பு மற்றும் விளம்பர விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த விதிமுறைகளை சில சேனல்கள் மீறி வருகின்றன.
அதாவது சமீபத்தில் ரிஷப் பண்ட்டின் கார் விபத்து வீடியோ எந்தவித எடிட்டிங் செய்யப்படாமல் அப்படியே ஒளிபரப்பு செய்யப்பட்டன.
அதுபோல் கடந்த வாரம் டெல்லியில் பெண் ஒருவர் காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தின் வீடியோவும் அப்படியே ஒளிபரப்பு செய்யப்பட்டது.இது போன்ற வீடியோக்களை எடிட்டிங் செய்யப்படாமல் அப்படியே ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று சட்டதிட்டங்களே உள்ளன.இருப்பினும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனை பின்பற்றாமல் அப்படியே ஒளிபரப்பு செய்து வருகின்றன.இதுபோன்று காட்சிகளை ஒளிபரப்பு செய்யப்படுவது சேனல்களின் சேவைகள் முடக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.எனவே முறையான விதிமுறைகளை பின்பற்றும் படி எச்சரித்துள்ளது.