டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில், 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்றும், எனவே ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் கோரி வருகின்றன.
மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக, 28 ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. அது தொடர்பான வழக்கில், முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகள் நிலத்தை சமமாக பகிர்ந்து கொள்ளுமாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
ஆனால் அந்த தீர்ப்பை 3 அமைப்புகளும் ஏற்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மொத்தம் 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டன.
சமரச பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு நடத்திய பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கவில்லை. அயோத்தி வழக்குகளை விரைந்து முடிக்க முடிவு செய்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்டு 6ம் தேதி முதல் நாள்தோறும் வழக்கை விசாரித்து வருகிறது.
40 நாட்களாக நடைபெற்ற வாதங்கள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவு அடைந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.
மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.