அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு மண்பானை மண்சட்டி வழங்கப்பட்டது

0
118

அரியலூர் மாவட்டம் ,உடையார்பாளையம் வட்டம் தா.பழூர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அக்னி சிறகுகள் அறக்கட்டளை சார்பாக மக்களுக்கு மண்பாணை மண்சட்டி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி,பச்சை மனிதர் தங்க சண்முக சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு மண்பானை மண்சட்டி பயன்பாட்டினையும்,பயன்களையும் கூறி மக்களுக்கு மண்பானை மண்சட்டியை வழங்கினார்கள்.அதன் பின் மரக்கன்றுகள் நடும் விழாவும் நடைப்பெற்றது.இறுதியாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

அக்னி சிறகுகள் அறக்கட்டளை சார்பாக இந்த ஊர் இளைஞர்கள் கிராம முழுவதும் 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.மேலும் ஏழை ,எளிய மாணவர்களின் படிப்பிற்கும் பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறார்கள்.அண்மையில் இந்த இளைஞர்களால் ஊரில் உள்ள ஏரி தூர்வாரப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவிற்கு பதில் இவரா? ரஜினிக்கு பதில் இவரா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
Next articleOBC இட ஒதுக்கீடு 3 மாதங்களில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை