இஸ்லாமிய பெண்களை ஏலத்தில் விட்ட ஆப்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய பெண்கள் பதிவேற்றும் புகைப்படங்களை திருடி இணையத்தில் பதிவேற்றும் ஆப்கள் முடக்கப்பட்டன.
கொரோனா ஊரடங்கால் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் வழக்கத்துமாறாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை வைத்து விளம்பரம் செய்வதாக புகார் எழுந்தது. குறிப்பாக இஸ்லாமிய பெண்களை அவதூறு செய்யும் வகையில், அவர்கள் ட்விட்டரில் பதிவேற்றும் படங்களை திருடி அவர்களுக்கு தெரியமலையே “புல்லிபாய்”, “சல்லிடீல்ஸ்” போன்ற ஆஃப்களில் பதிவேற்றபட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த சட்டவிரோத செயல் தொடர்ந்து வந்த நிலையில், சல்லிடீல்ஸ் ஆப் பில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி , “இஸ்லாமிய பெண்கள் விற்பனைக்கு” என்று, ஒரு செய்தி தொடர்ந்து பரவி வந்தது.
இது தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிரடியாக சல்லிடீல்ஸ் ஆப் முடக்கப்பட்டது.
தற்போது மீண்டும் புல்லிபாய் ஆப் மூலம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றி பெண்களை விலை பேசுவதாக புகார் எழுந்தது.
இந்த ஆப் செயலியானது, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சாப்ட்வேர் பகிர்வு தளமான கிட் ஹப் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும், இதில் சில பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு “டீல் ஆஃப்தி டே” என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சியும் இடம் பெற்று உள்ளது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த ஆப்பை தற்போது போலீசார் முடக்கி உள்ளனர்.