உங்களால் தான் என் தந்தை உயிர் பிழைத்தார்! Apple நிறுவனத்திற்கு நன்றி சொன்ன இளைஞர்!

Photo of author

By Kowsalya

இப்பொழுது நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்குகள் கேட்ஜெட்ஸ் வகிக்கின்றன. அவைகள் இல்லாமல் ஒரு நாள் முழுமை அடைவதே கஷ்டமாக இருக்கின்றது. அதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு நிறுவனமும் மிகவும் பயனுள்ளதாக அதன் அமைப்புகளை மாற்றிக் கொண்டுதான் வருகின்றன. அப்படித்தான் இந்த நிகழ்வும் நிகழ்ந்துள்ளது. 61 வயதான முதியவரை காப்பாற்றிய Apple Watch.

61 வயதான இந்த முதியவர் ராஜ்ஹான்ஸ்க்கு இவர் மருந்தியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சித்தார். இவர் தனது தந்தைக்கு ஆப்பிள் 5 சீரிஸ் கை கடிகாரத்தை பரிசாக அளித்துள்ளார்.

மார்ச் மாதம் முதலிலிருந்தே ராஜ்ஹான்ஸ்க்கு உடல் நிலையில் ஒரு சில குறைபாடுகள் இருந்து வந்துள்ளன.

அந்த ஆப்பிள் 5 சீரிஸ் வாட்ச் ECG தகவல்களை தர வல்லது. அதனால் சித்தார் அந்தத் தகவல்களை தான் பெறும்படி அதாவது தனக்கு அலாரம் அடிக்கும் படி செட் செய்துள்ளார்.

இந்நிலையில் ஒரு சில நாட்களாகவே ராஜ்ஹான்ஸ்க்கு இதயத்துடிப்பில் ஒரு சில மாற்றங்கள் இருந்து வந்ததை அலாரமாக அந்த வாட்ச் சித்தாருக்கு தெரிவித்துள்ளது.

இரண்டு முறைகளுக்கு மேல் இதேபோல் அலாரம் வந்ததால் சித்தார் பயந்துபோய் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு தனது தந்தையான ராஜ்ஹான்ஸாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருந்ததால் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்த பின்னர் தந்தையின் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆப்பிள் நிறுவனத்திற்கு சித்தார் ஈமெயில் வாயிலாக தகவலை தெரிவித்துள்ளார். உங்களால் தான் என் தந்தை

காப்பாற்றப்பட்டார் என்று அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆப்பிள் நிறுவனமும் பதில் அளித்துள்ளது. உங்கள் தந்தை நன்றாக இருக்கிறார் என்று நம்புகிறோம். எங்களது குழு உங்களுக்கு எப்பொழுதும் துணையாக இருக்கும் என்ற பதில் வந்துள்ளது.

இந்த Apple Watch ஆனது முதியவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. என்னதான் மக்கள் பெருகி வரும் நாகரீகத்தை குறை சொல்லிக் கொண்டிருந்தாலும், ஒருசில நாகரீகத்தால் வளர்ந்து வரும் கட்ஜெட்ஸ் நமக்கு பெரிதும் உதவுகின்றன என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சி.