TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் முதுநிலை பட்டப் படிப்புக்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் 2023ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
அன்று காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் முதுநிலை பட்டப் படிப்புக்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த டான்செட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு மார்ச் 11ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.