ஜிப்மர் மருத்துவ மனையில் 80 காலி பணியிடங்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம்!!

0
81
Apply for 80 vacancies in Jipmar Hospital from today!!
Apply for 80 vacancies in Jipmar Hospital from today!!

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), இந்த கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதில் மொத்தம் 80 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக இன்று முதல் விண்ணபிக்கலாம்.

புதுச்சேரி ஜிப்மரில் பல்வேறு மருத்துவ துறைகளில் பேராசிரியர் பதவிக்கு 26 இடங்களும், உதவி பேராசிரியர் பதவிக்கு 35 இடங்களும் நிரப்பப்படுகிறது. காரைக்கால் ஜிப்மரில் பேராசிரியர் பதவிக்கு 2 இடங்களும், உதவி பேராசிரியர் பதவிக்கு 17 இடங்களும் உள்ளன. பேராசிரியர் பதவிக்கு 21.11.2024 தேதியின் படி, 58 வயதை கடந்திருக்கக்கூடாது. உதவி பேராசிரியர் பதவிக்கு 21.11.2024 தேதியின் படி, 50 வயதை கடந்திருக்கக்கூடாது. துறைக்கு ஏற்ற பிரிவில் மருத்துவ படிப்பு மற்றும் அனுபவம் தேவை.

பேராசிரியர் பதவிக்கு 14 வருடங்கள் மற்றும் உதவி பேராசிரியர் பதவிக்கு குறைந்தது 3 வருடங்கள் அனுபவம் தேவை. சம்பளம் விவரம்  பேராசிரியர் பதவிக்கு நிலை -14-ஏ (ரூ.1,68,900 – ரூ.2,20,400) வழங்கப்படும். உதவி பேராசிரியர் பதவி நிலை-12 (ரூ.1,01,500 முதல் ரூ.1,67,400) வழங்கப்படும்.

ஆன்லைன் மூலம் விண்ணபிக்க இந்த இணையதளத்தில்  https://jipmer.edu.in/  விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.  பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். தபால் மூலமாகவும் அனுப்ப இந்த முகவரிக்கி அனுப்பலாம்  Assistant Administrative Officer, Admn. 4 (Faculty Wing) Second Floor, Administrative Block, JIPMER Dhanvantari Nagar, Puducherry 605 006. இந்த பணிக்கி விண்ணப்பிக்கும் கடைசி நாள் 21/11/2024. அதே போல் இமெயில் மற்றும் தபால் மூலம் அனுப்ப கடைசி நாள் 27.11.2024.

Previous articleபொதுமக்களுக்கு உஷார்!! இனிமேல் திறந்த வெளியில் இந்த காரியத்தை செய்தால் உடனடி அபராதம்!!
Next articleகுப்பை மேடாக மாறிய தவெக மாநாடு!! 12 லட்சம் அபராதம்.. அதிர்ச்சியில்!!