அரசு பேருந்து ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவிப்பு !!

0
112

 

அரசு பேருந்து ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவிப்பு !!

 

 

 

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

 

 

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

விண்ணப்பம் தொடங்கும் தேதி : ஆகஸ்ட் -18

 

 

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : செப்டம்பர் -18

 

 

 

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி மற்றும் கூடுதல் விவரங்களுக்கு :

 

www.arasubus.tn.gov.in

 

 

பணி நியமனம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என அறிவிப்பு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

தேர்வு முறைகள் :-

 

 

தகுதி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு முதலில் எழுத்துத் தேர்வு,

 

 

 

 

இரண்டாவதாக ஓட்டுநர்- நடத்துநர்களுக்கான, திறன் தேர்வு

 

 

 

 

இறுதியாக, நேர்காணல்

 

ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

 

 

மேலும், தகுதி அடிப்படையில் மட்டுமே நியமனம் நடைபெறும் என்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Previous article23 வயதுள்ள இளைஞருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்… iQOO நிறுவனத்தின் அதிரடி முடிவு!!
Next articleமதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை… மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!!