இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

CineDesk

Apply from today!! +2 IMPORTANT NOTICE FOR STUDENTS!!

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். +2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் அவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

அதாவது இன்று பிற்பகல் முதல் www. dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்த மாணவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு  விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் மறுக்கூட்டலுக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு, அதை பூர்த்தி செய்து 2 நகல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதை நாளை மே 31ம் தேதி பிற்பகல் முதல் ஜூன் 3 ம் தேதி மாலை 5 மணி வரை மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவகத்தில் சமர்பிக்க வேண்டும். இந்த மறுகூட்டல் மற்றும் மறுமதிபீட்டிற்கான கட்டணம் பாடம் ஒன்றிற்கு ரூ.205ம் உயிரியல் படத்திற்கு மற்றும் ரூ.305 என குறிப்பிடப் பட்டுள்ளது.