இத்திட்டத்தின் மூலம் நூலாசிரியர்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பட விரும்புவோர் தங்களது விண்ணப்பப் படிவங்களை மன்றத்திற்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது என்றும் அறிவித்துள்ளனர்.
தபாலின் மூலம் விண்ணப்பப் படிவங்களை அனுப்பக் கூடியவர்கள் 25.10.2024 – க்குள் அனுப்ப வேண்டும் .மேலும், தங்களது முகவரி இருக்கும் இடத்தில் ரூ.10 க்கான தபால் தலையை ஒட்டி அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி :-
உறுப்பினர் – செயலாளர்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31, பொன்னி, பி. எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை – 600028.
தொலைப்பேசி எண்:-
044-2493 7471.
தமிழ்நாடு மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள திட்டங்கள் பின்வருமாறு :-
தமிழ்நாடு மக்களுக்கான நலத்திட்டங்கள், நிதி உதவி திட்டங்கள் ,மகளிர் உரிமைத் தொகையான குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குதல், முதியோர்களுக்கு ஓய்வூதியம், திருமண நலத்திட்டங்கள், கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கான நிதியுதவித் திட்டங்கள், கணவனை இழந்த பெண்களுக்கான நிதியுதவித் திட்டங்கள் என பல திட்டங்களின் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.