உங்கள் கண்களின் அழகை கெடுக்கும் கருவளையம் நீங்க இந்த க்ரீமை அப்ளை செய்யுங்கள்!! உடனே ரிசல்ட் கிடைக்கும்!

Photo of author

By Divya

உங்கள் கண்களின் அழகை கெடுக்கும் கருவளையம் நீங்க இந்த க்ரீமை அப்ளை செய்யுங்கள்!! உடனே ரிசல்ட் கிடைக்கும்!

முகத்தை இளமையாகவும்,அழகாகவும் வைத்துக் கொள்ள பலர் ஆசைக் கொள்வர்.ஆனால் முகத்தில் சிறு காயம் ஏற்பட்டால் கூட அதன் அழகு முழுமையாக குறைந்து விடும்.முகத்தை பொன் போல் பராமரிக்க வேண்டும்.ஆனால் இங்கு பலர் முகத்தை நீரில் கழுவி சுத்தம் செய்யவே நேரம் இல்லாதது போல் காட்டிக் கொள்கிறார்கள்.

முகத்தை நாம் எந்த அளவிற்கு பராமரிக்கின்றோமோ அந்த அளவிற்கு அவை முதுமையை தள்ளி போட நமக்கு உதவுகிறது.மொபைல்,லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் நம் கண்கள் எளிதில் பாதித்து விடும்.

கண் பார்வை மெல்ல மெல்ல குறையத் தொடங்கி விடும்.அதேபோல் கண்களை சுற்றி கருவளையம் தோன்றி அவை கண்களின் அழகை வெகுவாக பாதிக்க செய்து விடும்.கருவளையம் தோன்றி விட்டால் அவை வயதான தோற்றத்தை கொடுப்பதோடு தன்னம்பிக்கையையும் இழக்கச் செய்கிறது.

கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் நீங்க இயற்கை வழிகள்:-

1)விளக்கெண்ணெய்
2)தேங்காய் எண்ணெய்

இந்த இரண்டு எண்ணெய்களையும் சம அளவு எடுத்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை இரவு நேரத்தில் கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கருவளையம் முழுமையாக நீங்கும்.

1)உருளைக்கிழங்கு
2)விளக்கெண்ணெய்

ஒரு துண்டு உருளைக்கிழங்கை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து கலக்கி கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் ஒரே கருவளையம் நீங்கும்.

1)ரோஜா இதழ்
2)கற்றாழை ஜெல்

ஒரு தேக்கரண்டி ரோஜா இதழை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் போடவும்.அதன் பின்னர் ஒரு துண்டு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனையாக பிரித்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை ரோஜா இதழ் பேஸ்ட்டில் போட்டு நன்கு கலந்து விடவும்.இதை இரவு நேரத்தில் கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கருவளையம் முழுமையாக நீங்கும்.