உங்கள் சரும மருக்களை உதிரச் செய்யும் அற்புத ஹோம் ரெமிடி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இதை வைத்து மருக்களை நீக்கிவிடலாம்.
தேவையான பொருட்கள்:-
1)அம்மான் பச்சரிசி பொடி
2)குப்பைமேனி பொடி
3)மஞ்சள் பொடி
4)வசம்பு பொடி
5)சின்ன வெங்காயச் சாறு
செய்முறை விளக்கம்:-
முதலில் அம்மான் பச்சரிசி இலை பொடி,குப்பைமேனி பொடி,வசம்பு பொடி ஆகியவற்றை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளவும்.இல்லையேல் நீங்களாவே தயார் செய்தும் வைத்துக் கொள்ளலாம்.
அதன் பின்னர் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜூஸை கிண்ணம் ஒன்றில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அரை தேக்கரண்டி அம்மான் பச்சரிசி இலை பொடி,அரை தேக்கரண்டி குப்பைமேனி பொடி,அரை தேக்கரண்டி வசம்பு பொடி மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் கொட்டி பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை மருக்கள் மீது பூசினால் அவை சில மணி நேரத்தில் காய்ந்து உதிர்ந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)அம்மான் பச்சரிசி இலை பொடி
2)உருளைக்கிழங்கு சாறு
செய்முறை விளக்கம்:-
முதலில் அம்மான் பச்சரிசி இலையை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுக்க வேண்டும்.
ஒரு தேக்கரண்டி அம்மான் பச்சரிசி இலை பொடிக்கு இரண்டு உருளைக்கிழங்கு சாறு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த பேஸ்டை மருக்கள் மீது தடவினால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)முள்ளங்கி சாறு
2)ஆமணக்கு எண்ணெய்
செய்முறை விளக்கம்:
முள்ளங்கியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள் பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் ஆமணக்கு எண்ணெய் சிறிதளவு கலந்து மருக்கள் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.