இதை தடவி குளித்தால் உங்கள் கூந்தல் பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும்!!
இன்றைய காலகட்டத்தில் கூந்தல் பராமரிப்பு அவசியம் தேவை படக்கூடிய ஒன்று.தலை முடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.தலையில் அதிக சிக்கு இருந்தால் தலை சீவும் பொழுது அதிகளவு முடி உதிர்தலை ஏற்படுத்தும்.
அதேபோல் தலையில் பொடுகு,அரிப்பு,வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் அவை முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.எனவே முடி வறட்சி,முடி உதிர்தல் நீங்கி அதிக மிருதுவாக முடியை பராமரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)சீகைக்காய்
2)பூந்தி கொட்டை
3)வெந்தயம்
4)கற்றாழை வற்றல்
4)நெல்லிக்காய் வற்றல்
செய்முறை:-
முதலில் ஒரு கற்றாழை மடலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் போட்டு நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதேபோல் பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் போட்டு நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.கற்றாழை மற்றும் நெல்லிக்காய் நன்கு காய்ந்திருக்க வேண்டும்.
அதன் பின்னர் 1/4 கப் வெந்தயத்தை நீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.மறுநாள் தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு காட்டன் துணியில் இந்த வெந்தயத்தை போட்டு மூட்டை கட்டவும்.இரண்டு தினங்கள் கழித்து பார்த்தால் வெந்தயத்தில் முளைகட்டியிருக்கும்.
இதை ஒரு வாணலியில் போட்டு குறைவான தீயில் 2 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து அதில் கற்றாழை வற்றல்,நெல்லிக்காய் வற்றல்,வெந்தயம்,ஒரு கைப்பிடி அளவு சீகைக்காய்,1/4 கப் பூந்தி கொட்டை சேர்த்து மைய்ய அரைத்து பொடி செய்து கொள்ளவும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைக்கவும்.
பயன்படுத்தும் முறை:-
ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த ஷாம்பு பொடி தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாகி கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கவும்.இவ்வாறு செய்வதன் மூலம் தலை சூடு குறையும்.இதனால் முடி உதிர்தல்,முடி வெடிப்பு,முடி வறட்சி உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கி கூந்தல் மென்மையாக காணத் தொடங்கும்.