உங்கள் தலையில் முடி வளர்ச்சி நன்றாக இருக்க அடர்த்தியான முடி வளர இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் செய்முறையை முயற்சிக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1)வெட்டி வேர் – 20 கிராம்
2)மகிழம் பூ – 20 கிராம்
3)வலம்புரி காய் – 20 கிராம்
4)பசும் பால் – ஒரு கிளாஸ்
5)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
பயன்படுத்தும் முறை:-
ஸ்டெப் 01:
முதலில் வெட்டிவேர்,மகிழம் பூ,வலம்புரி காய் ஆகியவற்றை தலா 20 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து இதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு கிளாஸ் காய்ச்சாத பசும் பால் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.10 மணி நேரம் வரை ஊறினால் போதுமானது.
ஸ்டெப் 03:
அதன் பிறகு இந்த கலவையை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கலவையை வாணலி ஒன்றில் போட்டு 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
ஸ்டெப் 04:
தேங்காய் எண்ணெய் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து பாட்டிலுக்கு வடிகட்டி வைத்து தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
இந்த மகிழம் பூ எண்ணெய் தலையில் முடி உதிர்வு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் புதிய முடி வளர வைக்க உதவுகிறது.இந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.தலையில் உள்ள பேன்,ஈறு போன்ற பாதிப்புகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
2)வேப்பிலை – ஒரு கைப்பிடி
பயன்படுத்தும் முறை:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
இந்த வேப்பிலை பேஸ்டை ஒரு இரும்பு கடாயில் போட்டு 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
ஸ்டெப் 03:
இந்த எண்ணையை ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.