கருப்பான உதடு சிவப்பாக மாற இந்த ஆயிலை ஒரு முறை தடவுங்கள்!! 

Photo of author

By Rupa

பெண்களின் முகத்தை அழகாக காட்டுவதில் உதடுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.சிலருக்கு உதடுகள் கருமையாக இருக்கும்.இதனால் செயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட லிப் ஸ்டிக்ஸை பயன்படுத்துவர்கள்.இதனால் கருமை உதடு தற்காலிகமாக சிவப்பாக தெரியும்.கருமையான உதடுகள் நிரந்தரமாக சிவப்பாக தெரிய இந்த வீட்டு டிப்ஸை ட்ரை பண்ணவும்.

1)தேங்காய் எண்ணெய்
2)எலுமிச்சை சாறு

இரவு நேரத்தில் இந்த ரெமிடியை ட்ரை செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.ஒரு கிண்ணத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து உதடுகளில் அப்ளை செய்யவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் உதட்டின் கருமை நீங்கி பிங்க் நிறத்தில் தோன்றும்.

1)பன்னீர் ரோஜா இதழ்
2)தேன்

ஒரு கப் பன்னீர் ரோஜா இதழை காயவைத்து பவுடராக்கி கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் ரோஜா இதழ் பொடி சேர்த்து தேன் கலந்து கொள்ளவும்.இதை உதடுகளில் அப்ளை செய்து வந்தால் கருமை நிறம் நீங்கும்.

1)கற்றாழை ஜெல்
2)சர்க்கரை

ஒரு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல்லில் சிறிதளவு வெள்ளை சர்க்கரை சேர்த்து க்ரீமாக்கி கொள்ளவும்.இதை உதடுகளில் பூசி வந்தால் உதட்டு கருமை நீங்கி சிவப்பாக மாறும்.

1)கொத்தமல்லி தழை
2)சர்க்கரை

சிறிதளவு கொத்தமல்லி தழையை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து உதட்டில் அப்ளை செய்தால் உதடு சிவப்பாக மாறும்.

1)பீட்ரூட்
2)தேன்

ஒரு மீடியம் சைஸ் பீட்ரூட்டின் தோலை நீக்கி விட்டு காய்கறி சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கடாயில் போட்டு கொதிக்க வைக்கவும்.பீட்ரூட் விழுது சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.பிறகு இதை ஆறவிட்டு சிறிதளவு தேன் கலந்து கொள்ளவும்.பிறகு இதை ஒரு டப்பாவில் ஊற்றி ப்ரீசரில் வைக்கவும்.இந்த பீட்ரூட் லிப் பாம்பை உதட்டிற்கு அப்ளை செய்து வந்தால் உதடு கருமை நிறத்தில் இருந்து பிங்க் நிறத்திற்கு மாறும்.