இதை சருமத்தில் பூசினால் நிலவு போன்ற பொலிவு கிடைக்கும்!! பெண்கள் அவசியம் ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Gayathri

இதை சருமத்தில் பூசினால் நிலவு போன்ற பொலிவு கிடைக்கும்!! பெண்கள் அவசியம் ட்ரை பண்ணுங்க!!

Gayathri

Apply this on the skin and you will get a moon like glow!! Girls must try it!!

வயதான பின்னரும் முகம் பொலிவுடன் இருக்க ஏராளமான பெண்கள் ஆசைக்கொள்கின்றனர்.ஆனால் முகச் சுருக்கங்கள் அவர்களின் அழகு மட்டுமின்றி தன்னம்பிக்கையும் குறையும் விதமாக தோன்றிவிடுகிறது.சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய இந்த அழகு குறிப்பு நிச்சயம் தங்களுக்கு உதவும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
2)ஆலிவ் எண்ணெய் – 25 மில்லி
3)கேரட் – ஒன்று
4)வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் – ஒன்று
5)பாதாம் எண்ணெய் – 20 மில்லி

செய்முறை விளக்கம்:-

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி வாங்கிக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து பற்ற வைக்கவும்.

பிறகு அந்த பாத்திரத்தில் 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.அதற்கு அடுத்து 25 மில்லி அளவு ஆலிவ் எண்ணெய்,20 மில்லி அளவிற்கு பாதாம் எண்ணெய் சேர்க்கவும்.

அதற்கு அடுத்ததாக வைட்டமின் சி கேப்ஸியூல் சேர்த்து எண்ணெயை சிறிது நேரம் சூடாக்கவும்.பிறகு ஒரு மீடியம் சைஸ் கேரட்டை தோல் சீவி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை துருவி வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது சூடாகி கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெய் கலவையில் துருவி வைத்திருக்கும் கேரட்டை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

கேரட் சாறு எண்ணெயில் இறங்கும் வரை பக்குவமாக கொதிக்க வைக்கவும்.அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெயை நன்றாக ஆறவிடவும்.

பின்னர் ஒரு பாட்டிலுக்கு இந்த எண்ணெயை வடிகட்ட வேண்டும்.அதற்கு நீங்கள் காட்டன் துணியை பாட்டிலின் வாய் பகுதியில் வைத்து இந்த கேரட் எண்ணெயை ஊற்றி பிழிந்து கொள்ளவும்.சொல்லப்பட்டுள்ள அளவுபடி எண்ணெய் தயாரித்தால் 15 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.இந்த எண்ணெயை தினமும் சருமத்தில் அப்ளை செய்து வந்தால் சருமம் அழகாக மாறும்.