ஆண்,பெண் அனைவருக்கும் உதடு அழகாக சிவந்த நிறைந்தில் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் அனைவராலும் இயற்கையான பிங்க்,ரெட் நிறத்தை பெற இயலாது.உடலில் மெலனின் உற்பத்தி அதிகமாக இருந்தாலோ,புகைபிடித்தல் பழக்கம்,உதட்டு சாயம் பூசும் பழக்கம் இருந்தாலோ உதடுகளின் நிறம் டார்க் நிறத்திற்கு மாறி முக அழகை குறைத்துவிடும்.
ஒவ்வொருவருக்கும் புன்னகை என்பது அவர்களின் வாழ்க்கையை அழகாக மாற்றும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.எனவே பற்கள் மட்டுமின்றி உதடுகளின் வசீகர தோற்றத்தில் இருந்தாலே மட்டுமே ரசிக்கும் படியாக இருக்கும்.
கருமையான உதடுகளை பிங்க் நிறத்திற்கு மாற்றுவது எப்படி?
1)எலுமிச்சை சாறு
2)சர்க்கரை
ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை ஒன்றாக மிக்ஸ் செய்து உதடுகளில் பூசவும்.அவை நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீர் பயன்படுத்தி உதட்டை துடைக்கவும்.இப்படி செய்வதால் கருமையான உதடு பிங்க் கலராக மாறும்.
1)பால்
2)தேன்
ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பால் இரண்டு தேக்கரண்டி அளவு ஊற்றவும்.பிறகு ஒரு தேக்கரண்டி தென் சேர்த்து உதடுகளில் அப்ளை செய்யவும்.ஒரு மணி நேரம் கழித்து உதட்டை கழுவினால் கருமை நிறம் குறைந்திருக்கும்.
1)பீட்ரூட் சாறு
2)தேன்
100 மில்லி பீட்ரூட் சாற்றை 25 மில்லியாகும் வரை கொதிக்க விடவும்.பிறகு அதில் சிறிதளவு தேன் கலந்து ஆறவிடவும்.இதை உதட்டின் மேல் பூசி வந்தால் உதடு கருமை நிறத்தில் இருந்து பிங்க் நிறத்திற்கு மாறும்.
1)கொத்தமல்லி தழை
2)சர்க்கரை
சிறிதளவு கொத்தமல்லி தழையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.இதை உதட்டின் மேல் அப்ளை செய்து வந்தால் இயற்கையாகவே உதடு பிங்க் நிறத்திற்கு மாறும்.