கரும்புள்ளிகள் நீங்க.. தேனுடன் இந்த ஒரு பொடி கலந்த பேஸ்டை மூக்கின் மேல் அப்ளை அப்ளை செய்யுங்கள்!!

Photo of author

By Divya

மூக்கின் மேல் பகுதியில் காணப்படும் கரும்புள்ளிகள் முக அழகை கெடுத்துவிடுகிறது.இதை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான நீர் சேர்த்து ஒரு தேக்கரண்டி கல் உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த நீரை பயன்படுத்தி முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்யுங்கள்.பின்னர் கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு உலரவிடுங்கள்.பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்யுங்கள்.இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் இரண்டு வாரங்களில் நீங்கிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பட்டை – 50 கிராம்
2)தேன் – ஒரு தேக்கரண்டி

முதலில் 50 கிராம் அளவு பட்டை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு கிண்ணம் எடுத்து பட்டை பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி தேனை அதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கிவிடும்.