உங்கள் முகத்தில் வடியும் எண்ணெய்,டெட் செல்கள் நீங்கி புதிய பொலிவு பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள இன்ஸ்டன்ட் க்ளோ பேக் ட்ரை பண்ணுங்க.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை மடல் – ஒன்று
2)அரிசி கழுவிய தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு பெரிய கற்றாழை மடல் எடுத்துக் கொள்ளுங்கள்.அதன் மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு கிண்ணம் ஒன்றில் அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அதில் அரைத்த கற்றாழை ஜெல்லை போட்டு மிக்ஸ் செய்யுங்கள்.
பின்னர் இதை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யுங்கள்.இவ்வாறு செய்த பிறகு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி செய்தால் முகம் பொலிவாக மாறும்.
தேவையான பொருட்கள்:-
1)கடலை மாவு – அரை தேக்கரண்டி
2)முல்தானி மெட்டி – அரை தேக்கரண்டி
3)ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணத்தில் அரை தேக்கரண்டி கடலை மாவு,அரை தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
அடுத்து அதில் ரோஸ் வாட்டர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.இதை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்தால் முகக் கருமை நீங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)ரோஸ் வாட்டர் – ஒரு தேக்கரண்டி
2)பச்சை பயறு மாவு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணத்தில் பச்சை பயறு மாவு ஒரு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை முகத்தில் தடவி நன்றாக ஸ்க்ரப் செய்தால் முகம் வெள்ளையாக மாறும்.