மாதம் ரூ.1000 பெறுவதற்கு ஜூலை 3 வரை கால அவகாசம்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணப்பியுங்கள்!!

0
142
Apply till July 3 to get Rs.1000 per month; Tamil Nadu government has given time!!
Apply till July 3 to get Rs.1000 per month; Tamil Nadu government has given time!!

மாதம் ரூ.1000 பெறுவதற்கு ஜூலை 3 வரை கால அவகாசம்!! மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணப்பியுங்கள்!!

அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் +1 பயிலும் மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 2024-2025 கல்வியாண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்திருந்தது.இதற்காக ஜூன் 11 முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த திறனாய்வுத் தேர்வில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என்று மொத்தம் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கல்வியாண்டிலும் 10 மாதங்களுக்கு 10000 என்று இளங்கலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுவதால் ஏழை மாணவர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஜூலை 21 அன்று தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் விண்ணப்பிக்க இன்று இறுதி நாளாக இருந்தது.இந்நிலையில் பல தரப்பினரின் கோரிக்கையால் தற்பொழுது திறனறி தேர்விற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர்,அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்;

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும்,அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த தேர்வில் 500 மாணவர்கள்,500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் வரை தேர்வு செய்யப்படுவர்.அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என்றபடி இளநிலை பட்டப்படிப்பு வரை தரப்படும்.அதன்படி நடப்பாண்டுக்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசின் 9,10-ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தேர்வு நடைபெறும்.ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் கேட்கப்படும்.மேலும்,முதல்தாளில் கணிதமும்,2-ம் தாளில் அறிவியல்,சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும்.

இந்த தேர்வின் முதல் தாள் காலை 10 முதல் மதியம் 12 மணி வரையும்,2-ம் தாள் மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடத்தப்படும்.இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 11-ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது.தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து விருப்பமுள்ளவர்கள்www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை தேர்வுத் துறை வலைதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவேற்ற வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.