வரிச் சலுகை + ரூ.16 லட்சம்.. கிடைக்கும் இந்த அசத்தல் ஸ்கீம் பற்றி தெரிந்தால் இன்னைக்கே அப்ளை பண்ணிடுவீங்க!!

0
165
Apply today if you know about this amazing scheme with tax benefits + Rs.16 lakhs..
Apply today if you know about this amazing scheme with tax benefits + Rs.16 lakhs..

வரிச் சலுகை + ரூ.16 லட்சம்.. கிடைக்கும் இந்த அசத்தல் ஸ்கீம் பற்றி தெரிந்தால் இன்னைக்கே அப்ளை பண்ணிடுவீங்க!!

இந்தியாவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெரும்பாலான மக்கள் எதிர்கால வாழக்கைக்கு உகந்த பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி தொகை கிடைக்கும் திட்டங்கள் குறித்து ஆராய்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.இவ்வாறு பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் திட்டங்களில் ஒன்று அஞ்சல் சேமிப்பு.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த அஞ்சல் திட்டங்களில் குழந்தைகள்,பெண் குழந்தைகள்,பெண்கள்,மூத்த குடிகள் அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.பாதுகாப்பான திட்டம்,அதிக வட்டி,வரிச் சலுகைகள் கிடைப்பதால் அஞ்சல் அலுவலக திட்டங்களுக்கு மக்களிடத்தில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் எதிர்கால வாழக்கைக்கு சிறந்த சேமிப்பு திட்டமாக பொது வருங்கால வைப்பு நிதி(PPF) உள்ளது.இவை 15 ஆண்டு சேமிப்பு திட்டமாகும்.இந்த திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்ய முடியும்.அதேபோல் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ரூ.500 உள்ளது.

இந்த திட்டத்தில் 80c க்கு கீழ் வருமான வரிச் சலுகை வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை மத்திய அரசு வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வருகிறது.ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அஞ்சல் திட்டங்களில் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது.

அதன்படி PPF திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1% ஆக இருக்கிறது.இந்த திட்டத்திற்கான முதலீட்டு வருமானம் ஆண்டு இறுதியில் வழங்கப்படுகிறது.

ஆண்டு முதலீட்டு தொகை: ரூ.60,000(மாதம் ரூ.5,000)

வட்டி விகிதம்: 7.1%

முதலீடு செய்யும் ஆண்டுகள்: 15

முதலீட்டு தொகை: ரூ.9,00,000

வட்டி தொகை: ரூ.7,27,284

முதிர்வு தொகை: (ரூ.9,00,000)முதலீட்டு தொகை + (ரூ.7,27,284(வட்டி தொகை) = ரூ.16,27,284