கருணை அடிப்படையில் 7- பேருக்கு சமூக நலத்துறையில் பணி நியமனம்!

Photo of author

By Savitha

கருணை அடிப்படையில் 7- பேருக்கு சமூக நலத்துறையில் பணி நியமனம்!

Savitha

தூத்துக்குடியில் கருணை அடிப்படையில் 7- பேருக்கு சமூக நலத்துறையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து 7- பேருக்கு கருணை அடிப்படையில் அங்கன்வாடி பணி நியமன ஆணைகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, நகர்ப்புற ஊட்டச்சத்து அலுவலர் ரூபி, திருச்செந்தூர் நகர ஊட்டச்சத்து அலுவலர் காயத்ரி,மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.