10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 100/100 எடுத்த மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு!

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 100/100 எடுத்த மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு!

கடந்த மார்ச் மாதம் 01 அன்று தொடங்கப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அம்மாதம் 22 ஆம் தேதி நிறைவுற்றது.அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 அன்று தொடங்கப்பட்டு ஏப்ரல் 08 அன்று நிறைவடைந்தது.

12 ஆம் வகுப்பில் 94.56% மற்றும் 10 ஆம் வகுப்பில் 91.55% மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.மொழிப்பாடமான தமிழில் 12 ஆம் வகுப்பில் 35 பேரும் 10 ஆம் வகுப்பில் 08 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.

12 ஆம் வகுப்பில் 397 அரசு மேல்நிலை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியிருக்கிறது.அதேபோல் 10 ஆம் வகுப்பில் 87.90% அதாவது 1,364 அரசு உயர்நிலை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியிருக்கிறது.

இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடம் தமிழில் 100க்கு 100
மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பொதுத்தேர்வில் முழுத்தேர்ச்சி அதாவது 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும், தமிழ்ப் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ள மாணவ மாணவியர் அனைவரையும் பாராட்டும் வகையில் சீர்மீகு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் தலைநகர் சென்னையில் விரைவில் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.