DMK : திமுக ஆட்சி செய்து வரும் நிலையில் தனது வாரிசை முன்னிறுத்த ஒருபோதும் தயங்கவில்லை. இளைஞரணி தலைவரிலிருந்து தற்பொழுது துணை முதல்வர் பதவியில் உதயநிதி அமர்ந்துள்ளார். இருப்பினும் உதயநிதி கூறினால் தான் கட்சியில் வேலை நடக்கும் ஸ்டாலின் வெறும் பொம்மை முதலமைச்சர் தான் என்ற பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால் இதனை வெளிக்கொண்டு வராமல் கட்சிக்குள்ளையே முரண்பாடு காணப்பட்டது.
சமீபத்தில் அமைச்சர் பொன்முடி அவதூறாக பேசிய காரணத்தினால் அவரது பொதுச்செயலாளர் பதவியானது பறிக்க நேரிட்டது. தற்போது அந்த பதவிக்காக மூத்த நிர்வாகிகள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு காத்துள்ளனர். ஆனால் உதயநிதி ஆதவாளர்கள் அவருக்கு அந்த பொறுப்பு கொடுக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். அரசியலில் வந்து பல ஆண்டுகள் கழித்த பிறகுதான் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும்.
ஆனால் உதயநிதிக்கு உடனடியாக சிம்மாசனத்தில் அமர வாய்ப்பு கிடைத்து விட்டது மீண்டும் இந்த பதவி கொடுத்தால் தேவையில்லாத விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்று ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக உதயநிதி தனது அப்பாவிற்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவிற்கு கூட செல்லவில்லை. மேற்கொண்டு கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறுகின்றனர். தற்போது இந்த உட்கட்சி கோஷ்டி மோதலால் அப்பா மகன் இருவருக்கும் புகைச்சல் உண்டாகியுள்ளது.
இவர்களின் மோதல் போக்கு வெளிவட்டாரத்திற்கு வராமல் கட்சிக்குள்ளேயே நடந்து வருகிறது. தற்போது அரசியலுக்குள் வந்துவிட்டு மூத்த நிர்வாகிகளுக்கு கிடைக்க வேண்டிய இலக்காக்களை ஒதுக்காமல் தனக்கே கிடைக்க வேண்டும் என நினைக்கும் உதயநிதி மீது கட்சி நிர்வாகிகள் அதிருப்த்தியில் உள்ளனர்.