ஒயின்ஷாப் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. ஆட்சியரின் அடாவடியை கண்டித்து தீர்மானம் – பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!!
கரூர் மாவட்டத்தில் வேலாயுதம் பாளையம் என்ற பகுதியில் உள்ள ஓர் தனியார் மண்டபத்தில் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றதை யொட்டி பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.அதில் முதலாவதாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தனது விருப்பத்திற்கு ஏற்ப உரையை வாசித்ததன் காரணமாக அவரை விமர்சனம் செய்ததையொட்டி தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நவீன கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும் எனவும் இதனை தொடர்ந்து காவேரி ஆற்றில் லாரிகள் அல்லாது மாட்டு வண்டி மூலம் மட்டும் மணல் அல்ல உரிமை அளித்து உள்ளூர் விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து மணல் கடத்தல் நடப்பதால் அதனை தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் கரூர் மாவட்டத்தில் அதிகப்படியாக மது விற்பனை செய்ததற்கு அதனை பாராட்டி மதுபான கடை ஊழியர்களுக்கு குடியரசு தின விழா அன்று சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதன் தொடர்ச்சியாக போதைப்பொருள் தற்போது அதிக அளவில் உபயோகத்தில் உள்ளதாகவும் அதனை தடுக்க வலியுறுத்தி என கிட்டத்தட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றினர். மேலும் தற்பொழுது மத்திய பட்ஜெட் தாக்குதல் நடைபெற போவதால் இது தொடர்பான தகவல்களை மக்களுக்கு புரியும்வகையில் எடுத்துரைக்க வேண்டும் என செந்தில்நாதன் கூறினார்.