தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் 1 ஆண்டு தொழில் பழகுனர் பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் இதற்கு தகுதியானவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற் பழகுநர் பயிற்சியில் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
✓ Graduate apprentice ( engineering ) :-
காலி பணியிடம் – 157
உதவித்தொகை – ரூ.9000
கல்வி தகுதி – மெக்கானிக்கல் ஆட்டோமொபைல்ஸ் சிவில் எலக்ட்ரிக்கல் இசிஇ
✓ Graduate apprentice ( non engineering ) :-
காலி பணியிடம் – 151
உதவித்தொகை – ரூ.9000
கல்வி தகுதி – பி ஏ, பி எஸ் சி, பி காம், பி பி ஏ, பி சி போன்றவற்றில் இளங்கலை பட்டம்
✓ Diploma apprentice ( technician apprentice ) :-
காலி பணியிடம் – 270
உதவித்தொகை – ரூ.8000
கல்வி தகுதி – மேற்படி பொறியியல் பிரிவுகளில் டிப்ளமோ
விண்ணப்பிக்கும் முறை :-
www.nats.education.gov.in என்ற அரசினுடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அதன் பின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பங்களை பதிவு செய்ய ஏப்ரல் 22 கடைசி தேதி என்றும் மே 10 முதல் 14ஆம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.