மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்
மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குருபகவான். இன்றைக்கு உங்கள் நாள் குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாளாக உள்ளது. ஏனென்றால் பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் இன்று குழந்தைகள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடக்கும்.
நீதி உங்களுக்கு ஓரளகு அனுகூலமாக உள்ளதால் கவலைப்பட வேண்டாம். கணவன் மனைவியிடையே குழந்தைகள் மூலம் மகிழ்ச்சிகள் ஏற்படும். குடும்பத்தினரின் ஒரு சில திட்டங்களை நீங்கள் நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.
தொழில் வியாபாரங்கள் மிக அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் நன்மைகள் பெறுவார்கள்.
நண்பர்கள் உறவினர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும். அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை அருமையாக கடைபிடித்து மக்களை கவர்வார்கள்.
கலைத்துறையில் இருக்கும் நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி மகிழ்ச்சியாக இருப்பார்கள். மருத்துவச் செலவுகள் குறையலாம்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடையை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.