கும்பம் – இன்றைய ராசிபலன்!! தைரியம் அதிகமாக இருக்கும் நாள்!

Photo of author

By CineDesk

கும்பம் – இன்றைய ராசிபலன்!! தைரியம் அதிகமாக இருக்கும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சகாயஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் தைரியம் அதிகமாக இருக்கும். மாலையில் சுபா ஸ்தானத்திற்கு சந்திர பகவான் வருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். திடீரென வெளியூர் பிரயாணம் ஒன்று உருவாகலாம். நிதி சிறப்பாக உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை அருமையாக இருப்பதால் கவலை கொள்ள தேவையில்லை. குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் எந்த வித குழப்பமும் இல்லாமல் தெளிவாக நடைபெறும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பம் தீரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் தைரியமாக செயல்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்க்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.