கும்ப ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

கும்ப ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். சந்திர பகவான் அஷ்டம ராசியில் உள்ளதால் கஷ்டம் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. நிதி வருவதற்கு காலதாமதம் ஆகலாம். வாகன பயணங்களில் கவனம் மேற்கொள்வது நல்லது.

 

கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம்.

 

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை கவனமாக இருப்பது அவசியம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் மற்றும் அச்சம் தென்படும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் இழுபறி ஆகிறதே என்ற கவலை மேம்படும்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் வரலாம் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது அவசியம். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Leave a Comment