கும்பம் ராசி – இன்றைய ராசிபலன் !! குழப்பங்கள் குறையும் நாள்!!

0
222
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் ராசிஇன்றைய ராசிபலன் !! குழப்பங்கள் குறையும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கண்டிப்பாக வெற்றி அடையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அருமையாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதிலிருந்து வந்த கால தாமதங்கள் குறையும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் கண்டிப்பாக குறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த தேக்க நிலை மாறி அருமையான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்களுக்கு மருத்துவச் செலவு குறையலாம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here