கும்பம் – இன்றைய ராசிபலன்!!எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!

0
240
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!!எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வாகனப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.

குடும்ப உறவுகளின் பிரச்சனைகள் உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைந்து காணப்படும். வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் பர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு வகை குழப்ப அச்சம் காணப்படும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் வேண்டுமென்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பலவண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும் நாள்!
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பு நிறைந்த நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here