கும்பம் – இன்றைய ராசிபலன்!! தடைகள் அகலும் நாள்!

0
200
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! தடைகள் அகலும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தடைகள் அகலும் நாள். இன்று ஆற்றலுடன் செயல்படுவீர்கள். மனதில் ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

குடும்ப உறவு பலமாக உள்ளது. கணவன் மனைவியிடையே அதி அற்புதமான ஒரு புரிதல் உணர்வும் மேம்படும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் தொலைபேசி மூலம் உங்களுக்கு நன்மைகளை செய்வார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக முக்கிய முடிவுகளை அதிரடியாக எடுப்பீர்கள் அது உங்களுக்கு நன்மையை தரும்.

அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு பொறுப்புகள் கூடும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்க முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை கண்டிப்பாக கிடைக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த காரியத்திலும் சில தடைகள் இருக்கிறதே என்ற கவலை அருமையாக நீங்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்புநிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleகொரியா பெண்களின் பளபளப்பான முக அழகிற்கு என்ன காரணம் தெரியுமா ?
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் கைகூடும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here