கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள்!!
கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள் வந்து சேரலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
உத்தியோகத்தில் அவ சொல் உண்டாகும் என்பதால் எடுக்கும் கோப்புகளை கவனமாக கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் சில பிரச்சனைகள் உண்டாக்கும் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் யோசனை செய்து மேற்கொள்ள வேண்டும். புதிதாகத் தொழில் துவங்குபவர்கள் மூத்தவர்களின் அனுபவ ஆலோசனைகளை கேட்டு அதன் பிறகு செயல்படுத்துவது நல்லது.
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகம் செல்லும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது உசிதம். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு வேலையிலும் வெற்றியை சிறிது தடை தாமதத்திற்கு பிறகு பெறுவார்கள். வாழ்த்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.