கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

0
116

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைய தினம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். கணவன் மனைவிக்கிடையே பேசும் வார்த்தைகள் கவனம் அவசியம். வாழ்க்கைத் துணை உறவினர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவார்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். பொருளாதார முன்னேற்றம் சற்று ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில இன்னல்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் என்றாலும் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு தேவைப்படும் நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் கவனமாக இருப்பது அவசியம். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் கவனமாக பேச வேண்டும். கலை துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உறவினர்கள் நண்பர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும் என்றாலும் புதிய முதலீடுகளை தயவு செய்து இன்றைய தினம் தவிர்ப்பது நல்லது. காதலர்கள் கவனமுடன் பழகவும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு குழப்பம் வந்து நீங்கும் இல்லத்தரசிகளுக்கு உடலில் ஒரு வித அசதி தோன்றி மறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani