மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள்!!

0
184

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள்!!

மகர ராசி அவர்களை ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உடன்பிறப்புகள் ஆதரவுக் கரன் நீட்டுவார்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக செல்லும் கவலை கொள்ள தேவையில்லை.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எடுக்கும் காரியங்களை அருமையாக திறமட செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடி திட்டங்களை அதிரடியாக அறிவித்து வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் வெளியூர் பயணங்களின் மூலம் சில புதிய முயற்சிகளை செய்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உண்டாகும்.

மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதொடர்ந்து வறட்டு இருமல் வருகின்றதா? இதோ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள்!
Next articleகும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நிதிநிலை உயரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here