மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
185

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் நலம் விரும்பி வந்து பேசுவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் உண்டாகும். அதனால் கூட்டாளிகளை கலந்து பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

அரசு வழி காரியங்கள் இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமாக நிறைவேறும். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுகளில் தைரியமாக பேசுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் ஆற்றல் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடன் பிறப்புகள் வருகையால் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

 

Previous articleதனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இல்லம் களைகட்டி இருக்கும் நாள்!!
Next articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here