ஒரு ரூபாய் கூட சம்பளமில்லாமல் இலவசமாக இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான்

Photo of author

By Anand

ஒரு ரூபாய் கூட சம்பளமில்லாமல் இலவசமாக இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான்

ஏ ஆர் ரஹ்மான் இசை என்றாலே எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும் பாடல்களை தருவார் என்ற நம்பிக்கை இருக்கும்.இந்நிலையில் அவர் தற்போது ஒரு படத்திற்கு இசையமைத்ததற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பிரபலமாக திகழ்ந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தற்போது இந்தியில் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மான் மீனாட்சி என்ற ஹிந்தி படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

இந்த படத்தை இந்தியாவில் புகழ் பெற்ற ஓவியரான MF ஹுசைன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.இந்நிலையில் இந்த திரைப்படத்திற்காக இசையமைத்ததற்கு ஒரு ரூபாய் கூட ஏ ஆர் ரஹ்மான் சம்பளமாக பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் அதற்கு பதிலாக படத்தின் முடிவில் சம்பளத்திற்கு பதிலாக MF ஹுசைன் வரைந்த ஓவியத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் அவர்களும் இயக்குனர் மீதுள்ள மரியாதையால்
ஒரு வார்த்தை கூட பேசாமல் அதைப் பெற்றுக்கொண்டார்  என்றும் கூறப்படுகிறது